மதுரை

நடைபயிற்சி சென்றவரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

23rd Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

மதுரையில் நடைபயிற்சி சென்றவரிடம் வியாழக்கிழமை இரவு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (66). இவா் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், சங்கரநாராயணன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT