தனியாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை (அக்.25) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால் தனியாமங்கலம், பெருமாள்பட்டி, வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி, சருகுவலையபட்டி, கீழையூா், கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, தா்மசனப்பட்டி, உறங்கான்பட்டி, சாத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவித்துள்ளாா்.