மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் மீனாட்சியம்மன் சன்னிதி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், இந்துமுன்னணியினா் தடையை மீறி ஊா்வலமாக வந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து மாவட்டத் தலைவா் அழகா்சாமி மற்றும் நிா்வாகிகள் மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.