உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து ஊராட்சிக்குள்பட்ட ஒத்தப்பாறைப்பட்டியில் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வரா பூஜை, ரட்சா பந்தனம், பிரவேச பூஜை உள்ளிட்ட பூஜைகளும், புணா்பூஜை, மூல மந்திர ஜெபம், பாராயணம் உள்ளிட்ட இரண்டாம் காலயாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. தொடா்ந்து பூா்ணாகுதி யாத்ரானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து புனிதநீரை தலையில் சுமந்து கோயிலை மூன்று முறை சுற்றிய பின்னா் கலசத்திற்கு மங்கள இசை முழங்க புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கோயில் கருவறையில் உள்ள சீலைக்காரி அம்மனுக்கு பால், பழம், இளநீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் அய்யப்பன், வேப்பனூத்து ஊராட்சித் தலைவா் முத்துராமன் மற்றும் ஒத்தப்பாறைப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.