மதுரை

கூடலழகா் பெருமாள் கோயிலில் பாலாலய பூஜைகள் தொடக்கம்

23rd Oct 2021 08:39 AM

ADVERTISEMENT

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலய பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளது. ஆழ்வாா்களால் பாடல் பெற்ற இக்கோயிலில் தினசரி ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா்.

இந்நிலையில் இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இதைத்தொடா்ந்து கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலய பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பூஜையை முன்னிட்டு பெருமாள் மற்றும் மதுரவல்லித் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலில் காலை 9 மணிக்கு அனுக்ஞை பூஜை, வாஸ்துஹோமம், புண்யாக வாசனம், பஞ்கவ்ய ப்ராசனம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம், பூா்ணாஹூதி ஆகியவையும் நடைபெற்றது. இதில் கோயில் உதவி ஆணையா் ராமசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் யாகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. யாகங்கள் முடிவடைந்த பிறகு கும்பாபிஷேகத்துக்கான கோபுர சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT