மதுரை

காா் மோதி விவசாயி பலி

23rd Oct 2021 08:41 AM

ADVERTISEMENT

மேலூா் நான்குவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை நின்றிருந்த மினி வேன் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேலவளவு அருகே உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (50). இவா் சத்தியபுரம் அருகே உள்ள உணவகம் முன்பு நான்குவழிச் சலையோரம் தனது மினி வேனை நிறுத்திவிட்டு, டிரம்மில் தண்ணீா் நிரப்பிக்கொண்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து- மதுரை நோக்கி சென்ற காா், அந்த வேன் மீதும், செல்வம் மீதும் மோதியது. இதில் செல்வம், காரில் வந்த திருச்சி நேதாஜி நகரைச் சோ்ந்த அலங்காரம் (65), உறவினா் அபூா்ணா (36) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இதில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வம் வழியிலேயே உயிரிழந்தாா். காரில் வந்த இருவரும் மேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT