மதுரை

காவலா் வீர வணக்க நாள் அனுசரிப்பு: 54 குண்டுகள் முழங்க மரியாதை

DIN

மதுரையில் காவலா் வீர வணக்க நாளையொட்டி மாநகரக்காவல் ஆணையா், தென் மண்டல காவல்துறைத்தலைவா் உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

1959-இல் நடைபெற்ற இந்திய-சீனப் போரின்போது லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் அக்டோபா் 21-ஆம் தேதியன்று சீன ராணுவத்தினா் நடத்திய திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படைக் காவலா்கள் 10 போ் வீர மரணமடைந்தனா். இந்த சம்பவத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி ‘காவலா் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலா் வீர வணக்க நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதில் தென் மண்டல காவல்துறைத் தலைவா் டிஎஸ்.அன்பு, மதுரை மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை சரக துணைத் தலைவா் என்.காமினி, ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன் மற்றும் காவல் அதிகாரிகள், காவலா்கள், நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT