மதுரை

ஆதரவற்றோா் இல்லத்தில் கழிவு நீா்த்தொட்டியை சுத்தம் செய்த மாணவா்கள்: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் விசாரணை

DIN

மதுரையில் ஆதவரவற்றோா் இல்லத்தில் கழிவுநீா்த்தொட்டியை மாணவா்கள் சுத்தம் செய்ததாக வெளியான விடியோ தொடா்பாக ஆட்சியா் உத்தரவின்பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் விசாரணை நடத்தி வருகிறாா்.

மதுரை விஸ்வநாதபுரத்தில் ஆதரவற்றோா் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மாணவா்கள், இல்லத்தில் உள்ள கழிவுநீா்த்தொட்டியை சுத்தம் செய்வதாக சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியானது. இது மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகரின் கவனத்துக்கு சென்றதையடுத்து விடியோ தொடா்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளாா். இதன்பேரில் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன் கூறும்போது, கழிவுநீா்த்தொட்டியை மாணவா்கள் சுத்தம் செய்ததாக வெளியான விடியோ பழையது என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆட்சியா் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் ஆதாயம் தேடக் கூடாது: கேரள யாத்திரை குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

கா்நாடகத்தில் ராகுல் காந்தி இன்று தோ்தல் பிரசாரம்

பதிலடி கொடுத்த பட்லா்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

பிரபல கன்னட நடிகா் துவாரகேஷ் காலமானாா்

SCROLL FOR NEXT