மதுரை

மதுரை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: பக்தா்கள் தரிசனம்

21st Oct 2021 09:44 AM

ADVERTISEMENT

மதுரையில் சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மூலவருக்கு 250 கிலோ அரிசியில் அன்னம் சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று அன்னாபிஷேக அலங்காரத்தை தரிசனம் செய்தனா். மேலும் இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், திருவாப்புடையாா் கோயில், முக்தீஸ்வரா் கோயில் உள்பட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மதுரை பந்தடி 5-ஆவது தெருவில் உள்ள ஆதிசிவன் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் 15 அடிக்கு பல வகையான உணவுகள் மற்றும் பழங்களை கொண்டு சிவனின் உருவம் உருவாக்கப்பட்டிருந்தது. தக்காளி சாதம், வெண் பொங்கல், வெள்ளை சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிா் சாதம், வெண்பொங்கல், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை மற்றும் பலகாரங்களைக் கொண்டு சிவனின் உருவம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT