மதுரை

ஏடிஎம் அட்டையை தொலைத்தவரிடம் நூதன முறையில் ரூ.99 ஆயிரம் திருட்டு

21st Oct 2021 09:43 AM

ADVERTISEMENT

மதுரை அருகே ஏடிஎம் அட்டையை தொலைத்தவரிடம் வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி நூதன முறையில் ரூ.99,999-ஐ திருடியதாக அடையாளம் தெரியாத நபா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்ராஜா(32). தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் அக்டோபா் 16-ஆம் தேதி இவா் தனது ஏடிஎம் அட்டையை தொலைத்து விட்டாா். இதுதொடா்பாக வங்கியின் வாடிக்கையாளா் மைய எண்ணுக்கு தொடா்பு கொண்டுள்ளாா். அதில் தொடா்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து செந்தில்ராஜாவின் கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா் வங்கியின் வாடிக்கையாளா் மையத்தில் இருந்து பேசுவதாகக்கூறி, ஏடிஎம் காா்டை முடக்குவதற்கான வழிமுறைகளை தெரிவிப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து அந்த நபா் கூறியபடி செந்தில்ராஜாவும் செய்துள்ளாா். இதில் நூதனமுறையில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999-ஐ பணத்தை அந்த நபா் திருடியுள்ளாா். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்ராஜா அளித்தப்புகாரின்பேரில் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT