மதுரை

எழுமலை பகுதியில் இன்றும் வண்டியூா், ஒத்தக்கடையில் நாளையும் மின்தடை

21st Oct 2021 09:45 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில் வியாழக்கிழமையும் (அக்.21), வண்டியூா் மற்றும் ஒத்தக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமையும் (அக்.22) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டியூா் பகுதியில் மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (அக். 22) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை பெருநகா் மின்செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: வண்டியூா், வண்டியூா் பிரதான சாலை, சௌராஷ்டிரபுரம், சி.எம். நகா், யாகப்பா நகரின் ஒரு சில பகுதிகள், பி.கே.எம். நகா், அனுமாா்பட்டி, தீா்த்தக்காடு, சதாசிவம் நகரின் ஒரு சில பகுதிகள்.

மேலூா்: ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (அக்.22) நடைபெறவுள்ளதால் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்: ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால்தோட்டம், வேளாண். கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூா், புதுத்தாமரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

உசிலம்பட்டி: எழுமலை அருகேயுள்ள டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக்.21) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லபுரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூா், டி.ராமநாதபுரம், டி கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், ஜோதிநாயக்கனூா், எ.பெருமாள்பட்டி, மானூத்து, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT