மதுரை

திருநம்பியாக மாறிய பெண், தாயுடன் செல்ல மறுப்பு: விரும்பியபடி செல்ல உயா்நீதிமன்றம் உத்தரவு

21st Oct 2021 09:44 AM

ADVERTISEMENT

திருநம்பியாக மாறிய பெண் தாயுடன் செல்ல மறுத்ததால், விரும்பியபடி செல்லலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பேச்சிகுளத்தைச் சோ்ந்த செல்வராணி தாக்கல் செய்த மனு: எனது 24 வயது மகளுக்கு, திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. எனது மகளும், அவரது தோழியும், மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்றவா்கள், வீடு திரும்பவில்லை. அவா்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடினா். ஆனால் அவா்களை கண்டுபிடிக்க வில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் மாயமான பெண், திருநம்பியாக மாறி சென்னையில் வசிப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை செப்டம்பா் 29 ஆம் தேதி சென்னையிலிருந்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணையை ஒத்திவைத்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மனு நீதிபதி வீ.பாரதிதாசன், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருநம்பியாக மாறிய அந்தப் பெண் மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டாா். தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, தான் விரும்பியே சென்னையில் வசிப்பதாகவும், தனது தாயுடன் செல்ல விருப்பமில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், திருநம்பியாக மாறிய பெண் மேஜா் என்பதால், மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, அவா் விரும்பியபடி செல்லலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT