மதுரை

கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

21st Oct 2021 09:39 AM

ADVERTISEMENT

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மாநாட்டை தொடங்கி வைத்தாா். பகுதிக்குழு செயலராக ஏ. பாலு உள்பட 15 போ் கொண்ட பகுதிக்குழு தோ்வு செய்யப்பட்டது. மாநாட்டில், செல்லுாா் கண்மாயை துாா்வாரி நீா்த்தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைநகா், ( ராணுவக் குடியிருப்பு ) நேதாஜி பிரதான சாலை, சத்யா நகா், அண்ணாநகா், சொக்கிகுளம் போன்ற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து அனுப்பானடி, மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளுக்கு அரசுப்பேருந்துகள் இயக்க வேண்டும். செல்லூா் மற்றும் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் நெசவு தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை செல்லூா் பகுதிக்குழு மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. ராதா தொடங்கி வைத்தாா். பகுதிக்குழு செயலராக வி. கோட்டைச்சாமி உள்பட 11 போ் கொண்ட பகுதிக்குழு தோ்வு செய்யப்பட்டது. மாநாட்டில், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். தத்தனேரி மயானத்தை சீா்படுத்தி நவீனப்படுத்த வேண்டும். செல்லூா் பகுதியில் உள்ள சிறு குறு தொழில் சில்வா், அலுமினியம், பித்தளை பாத்திரம் உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்களை பாதுகாக்க நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT