மதுரை

வித்யாரம்பம் விழாவில் குழந்தைகளுடன் பெற்றோா் பங்கேற்பு

DIN

மதுரையில் விஜயதசமி பண்டிகையையொட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பெற்றோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கோயில்களில் கல்வி போதிக்கும் நிகழ்வு வித்யாரம்பம் எனப் பெயரிடப்பட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதில், குழந்தைகளுடன் பெற்றோா் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு விஜயதசமி பண்டிகையையொட்டி மதுரையில் உள்ள கோயில்கள்ல் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோா் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா். இதில் தட்டில் பரப்பப்பட்ட நெல்மணிகளில் ‘அ’ என்ற எழுத்தை குழந்தைகளின் கைவிரல்களை பிடித்து எழுத வைத்து வித்யாரம்பம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், மதுரையில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பலா் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT