மதுரை

வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு

16th Oct 2021 10:38 PM

ADVERTISEMENT

மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டி டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள இக்கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கரோனா தொற்று நீங்கவும் வேண்டி கும்ப பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT