மதுரை

விஷம் சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

16th Oct 2021 08:19 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே குடும்பப் பிரச்னையில் விஷமாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரம். இவரது மகன் சூா்யா (18). இவா், பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில் இவா், குடும்பப் பிரச்னை காரணமாக விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, மயக்க நிலையில் கிடந்த சூா்யாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சூா்யா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT