மதுரை

வார இறுதி நாள்களில் வழிபாட்டுக்கு அனுமதி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

16th Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

வார இறுதி நாள்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலைப்பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னா், தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாள்களில் கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வார இறுதி நாள்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். மேலும் அன்று அரசு விடுமுறை என்பதால், மதுரை மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலில் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல, கூடலழகா் பெருமாள் கோயில், நரசிங்கம் யோகநரசிம்மா் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் ஏராளமானோா் வழிபாடு நடத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT