மதுரை

மதுரை மாவட்டத்தில் 1.43 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு

16th Oct 2021 08:15 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 1.43 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 28 போ் குணமடைந்தனா்.

தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் 250 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

1.43 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்து 123 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது வரை 18 லட்சத்து 42 ஆயிரத்து 119 கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அரசு ராஜாஜி மருத்துவமனையில் 280, அரசு மருத்துவமனைகளில் 1,230, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 54,655, சுகாதாரக் கிடங்கில் 86,900 என மொத்தம் 1லட்சத்து 43 ஆயிரத்து 65 கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT