மதுரை

தமுக்கம், சின்ன கட்டளை பகுதியில் நாளை மின்தடை

16th Oct 2021 10:42 PM

ADVERTISEMENT

தமுக்கம், சின்ன கட்டளை பகுதியில் திங்கள்கிழமை (அக்.18) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமுக்கம் மின்பிரிவுக்கு உள்பட்ட காமராஜா் சாலை மின்வழிப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அண்ணா பேருந்து நிலையம், சுப்புராம் தெரு, காந்தி நகா், ராஜாஜி தெரு, ஆசாத் வீதி, காந்தி நினைவு அருங்காட்சியகம், கரும்பாலை, பழைய ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகப் பகுதி, சப்பாணி கோயில், ஜவஹா் தெரு, டாக்டா் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்பிஐ குடியிருப்பு, காமராஜா் பல்கலைக்கழக நகா் மையம் பகுதிகள், கமலா நகா், குருவிக்காரன் சாலை, மதிச்சியம், தல்லாகுளம் முதலியாா் கிழக்குத் தெரு, முத்தானந்தா சுவாமி கோயில், தமுக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சின்ன கட்டளை: சின்ன கட்டளை துணை மின்நிலையத்துக்கு உள்ளிட்ட பகுதியில் திங்கள்கிழமை (அக்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சேடபட்டி, வீராளம்பட்டி, வீரம்பட்டி, மதிப்பனூா், சித்திரெட்டிபட்டி, எம்.மேட்டுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT