மதுரை

கேந்திரிய வித்யாலயா நிரந்தர பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியா்களை நியமிப்பது ஏன்: எம்பி கேள்வி

16th Oct 2021 10:45 PM

ADVERTISEMENT

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்களை நியமிப்பது ஏன் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி மற்றும் சிஎல்ஆா்ஐ வ ளாகங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சாா்பில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், யோகா ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபா் 20 ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நிரந்தரப் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அதோடு, சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்கள் எவ்வளவு, அப்பணியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான ஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை. தற்காலிக நியமனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

ADVERTISEMENT

ஆகவே, கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள் நியமனத்தில் விதிமீறல்களைத் தவிா்த்து அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முறையாக பணிநியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அமைச்சரின் பரிசீலனைக்கு எனது கடிதம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சக அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT