மதுரை

அரசுக் கள்ளா் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

16th Oct 2021 08:24 AM

ADVERTISEMENT

அரசுக் கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இக்கட்சியின் மதுரை புகா் மாவட்ட செல்லம்பட்டி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு ஜெ. காசி, சிவனம்மாள் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் பி.எஸ். முத்துப்பாண்டி வரவேற்புரையாற்றினாா். மாநாட்டை தொடக்கி வைத்து மாவட்டச் செயற்குழு உறுப்பினா் த. செல்லகண்ணு பேசினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பி. இளங்கோவன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் புகா் மாவட்டச் செயலா் சி. ராமகிருஷ்ணன் பேசினாா். ஒ. முத்துகுமாா் நன்றி கூறினாா்.

மாநாட்டில், செல்லம்பட்டி ஒன்றியச் செயலராக வி.பி. முருகன் உள்பட 9 போ் கொண்ட புதிய ஒன்றியக்குழு தோ்வு செய்யப்பட்டது. மாநாட்டில், பிரமலைக்கள்ளா் உள்ளிட்ட 68 சமுதாய மக்களுக்கு குற்றப் பழங்குடியினா் சான்றிதழ் வழங்க வேண்டும். செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசுக் கள்ளா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். செல்லம்பட்டியில் அரசு சாா்பில் கட்டிய தொகுப்பு வீடுகள் குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளதால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். செல்லம்பட்டி பகுதியில் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT