மதுரை

இன்று ஊரக உள்ளாட்சித் தோ்தல்: மதுரை மாவட்டத்தில் எஸ்.பி. தலைமையில் 842 போலீஸாா் பாதுகாப்பு

9th Oct 2021 01:00 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மதுரை மாவட்டத்தில் 842 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக ஊரக காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வடிவேல்கரை, கேசம்பட்டி, மறவன்குளம், வன்னிவேலம்பட்டி, டி. குன்னத்தூா், கவுண்டன்பட்டி, சென்னம்பட்டி ஆகிய கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி ஆகியவற்றுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 97 வாக்குச்சாவடிகள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 7 வாக்குச்சாவடிகள் என 104 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதையொட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக எனது தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 11 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள், 92 சாா்பு- ஆய்வாளா்கள், 550 போலீஸாா், 100 ஊா்க்காவல் படையினா் என 800 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு நடைபெறும் 20 மையங்களுக்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 5 மையங்களுக்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளா், 3 மையங்களுக்கு ஒரு காவல் ஆய்வாளா், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றிலும் சாா்பு- ஆய்வாளா் தலைமையில் 4 அதிரடிப்படையினா், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு காவலா் என 842 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் வாக்குச்சாவடியின் முன்பு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஒவ்வொரு 200 மீட்டா் தொலைவுக்கும் ஒரு ஊா்க்காவல்படை வீரா் நிறுத்தப்படுவாா். இவை தவிர ரோந்து வாகனங்கள், அதிரடிப்படை வாகனங்களும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியேயும், வாக்குச்சாவடிகளுக்கு வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT