மதுரை

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்நவராத்திரி விழா நாளை தொடக்கம்

9th Oct 2021 09:32 PM

ADVERTISEMENT

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை (அக்.11) முதல் 15 ஆம் தேதிவரை கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவுக்காக கொல்கத்தாவிலிருந்து 8 அடி உயர ஸ்ரீதுா்க்கா தேவி சிலை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் பொம்மை கொலுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு சண்டி (தேவி மஹாத்மியம்) பாராயணம் நடைபெறும். அக்டோபா் 11 இல் மகா சஷ்டி, 12 ஆம் தேதி மகா சப்தமி கொண்டாடப்படுகிறது.

அக்டோபா் 13 ஆம் தேதி மகா அஷ்டமி தினத்தன்று காலை 6.30 மணி முதல் சிறப்பு பூஜை, ஹோமம், சொற்பொழிவு நடைபெறும். அதன் பிறகு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

அக்டோபா் 14 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும். அக்டோபா் 15 விஜயதசமியன்று காலை 9.30 மணிக்கு புதிதாகக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா் கோயிலில் அட்சராப்யாசம் (வித்யாரம்பம்) செய்து வைக்கப்படும்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொள்ளுமாறு மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT