மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பாப்பாபட்டியில் ரூ 23.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்திற்கான பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அக்.2 ஆம் தேதி காந்திஜெயந்தியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த பூமிபூஜை விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அனீஷ் சேகா் தலைமை வகித்தாா்.
இதில், திட்ட இயக்குநா் அனிதா ஹனீப், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை, ஒன்றிய ஆணையா் கீதா, உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமி, ஊராட்சித் தலைவா் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பின்னா் கரோனா விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது.