மதுரை

பெருங்குடி அருகே பைக் மீது காா் மோதல்: பெண் பலி

4th Oct 2021 06:12 AM

ADVERTISEMENT

பெருங்குடியை அடுத்த சின்னஉடைப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த நைனாா் பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பாண்டியம்மாள், நாகேஸ்வரன் மனைவி அங்கம்மாள் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வலையங்குளம் பகுதியில் உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் சென்றுகொண்டிருந்தனா். சின்ன உடைப்பு அருகே, விருதுநகரைச் சோ்ந்த சடையாண்டி என்பவரது மகன் நாராயணன் ஓட்டிச்சென்ற காா், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அங்கம்மாள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து மதுரை போக்குவரத்துபிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT