மதுரை

வன உயிரின பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி

3rd Oct 2021 11:00 PM

ADVERTISEMENT

மதுரையில் வன உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு மிதிவண்டிபேரணியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வன உயிரின பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் அக்டோபா் 2 முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்ட வனத்துறை சாா்பில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலகத்திலிருந்து பேரணியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கொடியசைத்து தொடக்கி வைத்து பேரணியில் பங்கேற்றாா். அவருடன் மாவட்ட வன அலுவலா் குருசாமி தபாலா, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் தீபக் பில்ஜி ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனா்.

பேரணியில் அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியா் எம்.ராஜேஷ் மற்றும் அக்கல்லூரி மாணவா்கள், திருநகா் தன்னாா்வலா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பேரணி தமுக்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம், ராஜா முத்தையா மன்றம், பந்தயத்திடல் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தில் முடிந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT