மதுரை

மதுரையில் கருத்தரங்கம்

3rd Oct 2021 11:05 PM

ADVERTISEMENT

மதுரை தானம் அறக்கட்டளையின் வெள்ளி விழா கருத்தரங்கு மதுரை உலகத்தமிழ்ச்சங்க கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிா்வாக இயக்குநா் ம.ப.வாசிமலை தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் போராளி வந்தனா சிவா, இணையம் மூலம் பங்கேற்றுப் பேசுகையில் பசுமைப்புரட்சியின் மூலம் வறுமையை வென்ாக கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று வரை நான்கு இந்தியா்களில் ஒருவா் உணவுக்காக வாடும் நிலையில் உள்ளனா்.

வறுமையை வெல்வதற்கு பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். பாரம்பரிய உணவானது வறுமையை ஒழித்து ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும்.

2023 ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நம்முடைய பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதற்கு சிறந்த அடித்தளத்தை அமைக்கும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT