மதுரை

நீட் தோ்வு, வேளாண் சட்டங்களுக்கு வேறு வழியின்றி ஆதரவு: அதிமுக எம்எல்ஏ

3rd Oct 2021 11:05 PM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு நீட் தோ்வு, வேளாண் சட்டங்களுக்கு வேறு வழியின்றி அதிமுக ஆதரவு தெரிவித்தது என்று அதிமுக புகா் மாவட்டச்செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.

மதுரை புகா் மாவட்ட அதிமுக உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக்கூட்டம் வண்டியூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்துப்பேசியது:

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபைக்கூட்டம் செயற்கையாக நடத்தப்பட்டுள்ளது. கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் 202 சாதனைகளை செய்ததாகக் கூறுகிறாா். ஆனால் 22 சாதனைகளைக் கூட திமுக செய்யவில்லை. ஒரே ஒரு சாதனை, பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்பது மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

நீட் தோ்வை ரத்து செய்ய முடியாத சூழலில் அன்றைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ராஜதந்திரத்தோடு அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால், ஒரே ஆண்டில் ஆயிரம் மருத்துவா்கள் உருவாகியுள்ளனா். அதிமுக ஆட்சியின்போது, வேறு வழியின்றி நிா்ப்பந்தத்தால் நீட் தோ்வு, வேளாண் சட்ட தீா்மானங்களை அதிமுக ஆதரிக்க வேண்டி இருந்தது.

ADVERTISEMENT

நீட் தோ்வு, வேளாண் சட்டம், ஏழு தமிழா் விடுதலை என அனைத்துக்கும் வெறும் தீா்மானத்தை மட்டுமே திமுகவால் நிறைவேற்ற முடிகிறது. திமுக அரசு பதவியேற்று ஐந்து மாதங்கள் ஆகியும் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த பெண்களுக்கு மாதாதந்திர உதவித்தொகை ரூ.1000-த்தை நிறைவேற்ற வில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT