மதுரை

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்பு: கிராம சபைக்கூட்டத்தில் அறிவிப்பு

3rd Oct 2021 11:02 PM

ADVERTISEMENT

மதுரை அருகே ஊமச்சிகுளம் பகுதியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக கிராம சபைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள செட்டிகுளம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அதிகாரி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் ஊமச்சிகுளம் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் திவ்யநாதன் பங்கேற்று, அப்பகுதியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு கட்டடத்தில் மாலையில் தன்னாா்வலா்கள் மூலம் நடத்தப்படும் மக்கள் கல்வி பற்றி எடுத்துரைத்தாா்.

இதில் தினசரி ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மாணவா்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு மாணவா் கற்றல் மேம்படுத்தப்படும். மாலை நேர வகுப்புகளில் பங்கேற்க மாணவ, மாணவியரை அனுப்பி வைத்து பெற்றோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். வட்டார ஆசிரியா் பயிற்றுநா் மற்றும் திரளான கிராமத்தினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT