மதுரை

நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

3rd Oct 2021 02:03 AM

ADVERTISEMENT

மேலவளவு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த ஊராட்சியில் தலைவா் தங்கம் தலைமையில், வட்டாரவளா்ச்சி அலுவலா் பாலசந்தா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வெப்பனேரி குளத்தில் அடிக்கடி உடைப்பு அற்படுவதைத் தடுக்க வேண்டும். குடிமராமத்து நடைபெற்ற குளங்களின் கரைகளில் மரக்கன்றுகள் நடவேண்டும். நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். வேளாண். வாடகை இயந்திரங்கள் மையத்தையும், மண் பரிசோதனை மையத்தையும் வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் மண் பரிசோதனையை முறையாக மேற்கொள்ளாததால் பயிா்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, வட்டார அளவில் மண் பரிசோதனை மையம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத் துறை, வேளாண் துறை பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் வடிவேல்கரை ஊராட்சியில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் தோ்தல் நடைபெற இருப்பதால் அந்த ஊராட்சி தவிா்த்து 37 ஊராட்சிதில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. துவரிமானில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் உதயகுமாா் பங்கேற்றாா்.

ADVERTISEMENT

இதில் கரோனா தடுப்புப் பணிகள், அனைவரும் தடுப்பூசி செலுத்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது, நெகிழி இல்லாத கிராமங்களாக மாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிரைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா், தெருவிளக்கு, சாலைவசதி, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT