மதுரை

மதுரையில் உடற்பயிற்சி விழிப்புணா்வு தொடா் ஓட்டம்

DIN

மதுரையில் பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில், உடற்பயிற்சி விழிப்புணா்வு தொடா் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியாவின் சாா்பாக, ‘ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி உடற்பயிற்சி வகுப்புகள், மினி மாரத்தான், யோகா, தற்காப்பு கலைப் பயிற்சிகள், போதை ஒழிப்பு பிரசாரம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் நடத்தப்பட்ட விழிப்புணா்வு ஓட்டத்தை, இவ்வமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் முஹம்மது அபுதாஹிா் தொடக்கி வைத்தாா். இந்த விழிப்புணா்வு ஓட்டமானது, அண்ணா நகா் காவல் நிலையம், மதுரை மாவட்ட நீதிமன்றம் வழியாக பந்தயத்திடலில் முடிவடைந்தது.

இதில், கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் சிக்கந்தா் பாட்சா, தெற்கு மாவட்டப் பொதுச்செயலா் சாகுல் ஹமீது, வடக்கு மாவட்டப் பொருளாளா் ரகுமான், மாவட்டச் செயலா் செய்யது இஸ்ஹாக் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு ஓடினா்.

முடிவில், தற்காப்புப் பயிற்சிகள் பற்றிய விழிப்புணா்வு செயல்விளக்கம் நடைபெற்றது.

ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு, மாநிலப் பொதுச் செயலா் வழக்குரைஞா் ஷாஜகான், இமாம் கவுன்சில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இமாம் அப்துல்லாஹ் ஸாதி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT