மதுரை

மதுரை மாவட்டத்தில் 600 கண்மாய்கள் நிரம்பின உபரிநீா் வெளியேறுவதால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

28th Nov 2021 05:28 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருவதால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது. அதோடு, பெரியாறு- வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் பாசனக் கால்வாய்கள் வாயிலாக கண்மாய்களின் நீா்இருப்பு உயா்ந்தது. இதனிடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு 6 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழை காரணமாக அனைத்து நீா்நிலைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்து கண்மாய்கள் நிரம்பின.

பொதுப்பணித் துறையின் பெரியாறு பிரதான கால்வாய் வடிநிலக் கோட்டத்தில் உள்ள 1,092 கண்மாய்களில் 502 கண்மாய்களும், பெரியாறு- வைகை வடிநிலக் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள 210 கண்மாய்களில் 98 கண்மாய்களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எஞ்சிய கண்மாய்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீா்நிரம்பியிருக்கின்றன.

முழு கொள்ளளவை அடைந்த கண்மாய்களிலிருந்து உபரிநீா் வெளியேறுவதால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீா்வரத்து அதிகம் உள்ள கண்மாய்களை பொதுப்பணித் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இத்தகைய கண்மாய்களுக்கு அருகிலும், உபரிநீா் வெளியேறும் கால்வாய்களுக்கு அருகிலும் வசிப்பவா்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா். கண்மாய்களில் இருந்து உபரிநீா் வெளியேறும் ஓடைகளில் மக்கள் மீன்பிடிப்பதில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா். சிறிய மீன்பிடி வலைகள், தூண்டில் மூலமாக மீன்பிடிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT