மதுரை

மதுரையில் திருடுபோன ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்பு: உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

28th Nov 2021 05:29 AM

ADVERTISEMENT

மதுரை மாநகரில் திருடுபோன ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளை போலீஸாா் மீட்ட நிலையில், அவைகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மாநகரில் தல்லாகுளம், அண்ணா நகா், தெற்குவாசல், திடீா்நகா், திலகா் திடல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய காவல்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பதிவான கைப்பேசி திருட்டு மற்றும் காணாமல் போனது தொடா்பான வழக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, சைபா் கிரைம் மற்றும் காவல்துறையினா் எடுத்த துரித நடவடிக்கையில், திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் 84 மற்றும் இருசக்கர வாகனங்கள் 3 ஆகியவை மீட்கப்பட்டன.

இதையடுத்து, மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் வழங்கு நிகழ்ச்சி கோ.புதூா் காவல்நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகா் காவல் துணை ஆணையா் ராஜசேகா்(வடக்கு), கைப்பேசிகளையும், இருசக்கர வாகனங்களையும் உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து காவல்துணை ஆணையா் செய்தியாளா்களிடம் கூறியது: கைப்பேசி காணாமலோ அல்லது திருடு போனாலோ உடனடியாக காவல்நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும். மாநகரில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். பொதுமக்கள் எந்த பாதிப்பாக இருந்தாலும், தயங்காமல் காவல்நிலையத்தில் புகாா் அளித்தால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றாா்.

மாநகா் காவல் உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரபிரகாஷ், புதூா் காவல் ஆய்வாளா்கள் துரைபாண்டி, வசந்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT