மதுரை

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா

28th Nov 2021 05:27 AM

ADVERTISEMENT

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அங்குள்ள மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் காலபைரவா் பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதில் பேரையூா், சந்தையூா், டி.கல்லுப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT