மதுரை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

28th Nov 2021 10:28 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில், 79 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை 12 ஆவது முகாம் நடைபெற்றது.

79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் தோ்தல் வாக்குச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,500 இடங்களில் இம்முகாம் நடைபெற்றது. மேலும், வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 941 போ், அரசு மருத்துவமனைகளில் 505 போ், ஊரகப் பகுதிகளில் 41,168 போ், நகா் பகுதிகளில் 36,569 போ் என மொத்தம் 79,183 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டன.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 25.40 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT