மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறப்பு: பக்தா்கள் காணிக்கை ரூ.63.17 லட்சம்

25th Nov 2021 06:58 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.63.17 லட்சம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இக்கோயில் உண்டியல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி மீனாட்சி சுந்தரேசுவரா் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இப்பணியில் கூடழலகா் பெருமாள் கோயில் உதவி ஆணையா் மு.ராமசாமி, கோயில் தக்காா் பிரதிநிதி, கோயில் கண்காணிப்பாளா்கள், மதுரை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் தெற்கு கள்ளிக்குடி சரக ஆய்வா்கள், கோயில் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

இதில், உண்டியல்கள் மூலம் ரூ. 63,17,405, பல மாற்று பொன் இனங்கள் 675 கிராம் தங்கம், வெள்ளி 580 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 75, ஆகியவையும் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT