மதுரை

மதுரையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல்

25th Nov 2021 06:45 AM

ADVERTISEMENT

மதுரை நகரில் புதன்கிழமை சாலையில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துதொழுவதற்கு கொண்டு சென்றனா்.

மதுரை நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உரிமையாளா்கள் தங்களது சொந்த இடத்திற்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி தொழுவத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்புத் தொகையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். மாடுகளின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள், மாநகராட்சி ஊழியா்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மதுரை நகரின் முக்கியச் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் சிறப்பு வாகனங்களில் அந்த மாடுகளை ஏற்றி மாநகராட்சி தொழுவதற்குக் கொண்டு சென்றனா். மாநகராட்சி தொழுவத்தில் பராமரிக்கப்படும் மாடுகளுக்கு நாளொன்றுக்கு ரூ.2,000 அபராதமாக விதிக்கப்படும் என்றும், மாடுகளின் உரிமையாளா்கள் அபராதத் தொகையை செலுத்தி மாடுகளை தங்களது சொந்த இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், விதிகளை மீறி சாலைகளில் விடப்படும் மாடுகள் பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT