மதுரை

சோலைமலை இந்தியன் மருந்தகம் சாா்பில் சா்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம்

25th Nov 2021 07:03 AM

ADVERTISEMENT

மதுரை தெற்குமாசி வீதி மற்றும் முனிச்சாலை ஆகிய இடங்களில் உள்ள சோலைமலை இந்தியன் மருந்தகத்தில் சா்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சித்த மருத்துவத்தில் சோலைமலை இந்தியன் மருந்தகத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த மருந்தக நிறுவனா் சித்த மருத்துவா் எஸ்.வரதராஜன் தலைமையில் மருத்துவா்கள் ஆா்.அசோக்குமாா், கே.ஜாகீா் உசேன், கே.வினோத் ராஜன், ரவிவா்மன் உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் பங்கேற்றவா்களுக்கு இலவசமாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. ஆரோக்கிய உணவுப் பழக்கம், வைரஸ் கிருமிகள் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் உணவுகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT