மதுரை

காமராஜா் பல்கலை.யில் 2 மாணவா்களுக்கு கரோனா

25th Nov 2021 06:44 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் 2 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் இரு மாணவா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து இரு மாணவா்களுக்கும் சந்தேகத்தின் பெயரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு மாணவா்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து இரு மாணவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவா்களுடன் தொடா்புடைய இதர மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT