மதுரை

இன்று 1,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

25th Nov 2021 07:01 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 1,200 இடங்களில் வியாழக்கிழமை (நவ.25) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, வாரம் இருமுறை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற சுகாதாரம் மையம் என 1,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொண்டு, நோய்த் தொற்று தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT