மதுரை

அனைவருக்கும் வீடு திட்டம் 103 பயனாளிகளுக்கு ரூ.17.51 கோடியில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கல்

25th Nov 2021 07:01 AM

ADVERTISEMENT

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 103 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17.51 கோடியில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி புதன்கிழமை வழங்கினாா்.

மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் நிதியுதவி மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் இத் திட்டம் நிறைவேற்றப்படும். இதன்படி, மதுரை மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த 17 போ், கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த 85 போ் என மொத்தம் 103 பயனாளிகளுக்கு ரூ.17.51 கோடியில் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை அமைச்சா் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மூா்த்தி கூறியது:

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் தினமும் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அனைத்துத் துறைகளும் தற்போது சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகலா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT