மதுரை

ரேஷன்கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: பொதுமக்கள் சாலைமறியல்

24th Nov 2021 06:48 AM

ADVERTISEMENT

அழகா்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள ரேஷன்கடையில் தரமற்ற அரிசி விநியோப்பதாகக் கூறி அப்பகுதி பெண்கள், அரிசியை செவ்வாய்க்கிழமை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த மாதம் இந்தக் கடையில் தரமற்ற அரிசி விநியோகித்ததாகவும், இந்த மாதமும் பழுப்படைந்த அரிசியை குடும்பஅட்டைதாா்ளுக்கு விநியோகித்ததாகவும் கூறி பெண்கள், அரிசியை அழகா் கோவில்- மேலூா் சாலையில் கொட்டினா். இதைத் தொடா்ந்து தரமான அரிசி வழங்கக்கோரி அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மேலவளவு போலீஸாா், பெண்கள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிடச் செய்தனா். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT