மதுரை

மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்தில் சேதம்: உரிமையாளா்களுக்கு கடைகள் ஒதுக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு

24th Nov 2021 06:44 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீவிபத்தில் சேதமடைந்த கடைகளின் உரிமையாளா்களுக்குக் கடைகள் ஒதுக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கடைக்காரா்கள் சங்கத் தலைவா் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியிலுள்ள வீரவசந்தராயா் மண்டபத்தில் 2018 பிப்ரவரி 2 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 19 கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு மாற்றிடம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பழைய மத்திய காய்கனி சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தங்கள் நடைபெறவுள்ளன. இங்குள்ள கடைகளில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு, கடைகள் ஒதுக்கீடு செய்த பிறகே ஒப்பந்தத்தை நடத்தவும், அதுவரை ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (நவ.24) ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT