மதுரை

காவலாளி சீருடையில் நோட்டமிட்டு திருட்டு: இளைஞா் கைது

24th Nov 2021 06:43 AM

ADVERTISEMENT

காவலாளி சீருடையில் சுற்றிவந்து கடைகளில் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலூா் மந்தைத் திடல் பகுதியில் காவலாளி உடையில் சுற்றித்தரிந்தவரை போலீஸாா், சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜ் (39) என்பதும், காவலாளி சீருடையில் அவா் கடைகளை நோட்டமிட்டு திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவா் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேலூா் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT