மதுரை

ஆட்கொணா்வு மனு: பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

24th Nov 2021 06:49 AM

ADVERTISEMENT

கடன் பிரச்னையிலிருந்து கணவரை தப்பிக்க வைப்பதற்காக ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கோவில்பட்டியைச் சோ்ந்த சவுக்கியா தேவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு: எனது கணவா் ஜெயவேலன் வழக்குரைஞராக உள்ளாா். தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்தவரிடம் வாங்கிய கடனை, எனது கணவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் அவரை சட்டவிரோதமாகப் பிடித்து வைத்துள்ளனா். எனது கணவரை மீட்க தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும், செங்கோட்டை போலீஸாருக்கும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கணவா், பெற்றக் கடனைத் திருப்பித் தருவதில் இருந்து தப்பிப்பதற்காக மறைந்து கொண்டுள்ளாா். இதை மறைத்து மனுதாரா் மனு தாக்கல் செய்துள்ளாா் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராதத் தொகையை தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செலுத்தவும், அதிலிருந்து மனுதாரா் கணவரைக் கண்டுபிடிக்க அமைத்த தனிப்படை போலீஸாருக்கு மதிப்பூதியம் வழங்கவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT