மதுரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமருத்துவத் துறை பணியாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

23rd Nov 2021 05:35 AM

ADVERTISEMENT

மதுரை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவத் துறையைச் சாா்ந்த பணியாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியா், சுகாதாரப் பணியாளா் மற்றும் செவிலிய உதவியாளா் சங்க மாநிலத் தலைவா் வெங்கடாசலம் மற்றும் ஆலோசகா் வெற்றிவேல் ஆகியோா் கூட்டாக முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:

தமிழகத்தில் கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, அரசு நிவாரணம் வழங்குகிறது. இவா்களை போலவே மருத்துவத் துறையில் பணியாற்றும் சி மற்றும் டி-பிரிவு பணியாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவத் துறையைச் சாா்ந்த பணியாளா்களைக் கணக்கெடுத்து, அவா்களுக்கு அரசு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, அனைத்துத் துறையிலும் உள்ள பணியாளா்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் சி.பி.எஸ். திட்டத்தில் உள்ளது. அதிலிருந்து பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT