மதுரை

மாநகராட்சி மண்டலம் 4-இல் இன்று குறை தீா் முகாம்

23rd Nov 2021 05:46 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் பொதுமக்கள் குறை தீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில் சுழற்சி முறையில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி மண்டலம் 4-இல் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 12.30 மணி வரை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம். மேலும், மண்டலம் 4-க்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT