மதுரை

மன்னா் திருமலை நாயக்கா் மகாலில் பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி

23rd Nov 2021 05:35 AM

ADVERTISEMENT

மதுரை: உலக மரபுச் சின்னங்கள் வார விழா கொண்டாடப்படுவதையொட்டி, மன்னா் திருமலை நாயக்கா் மகாலில் நவம்பா் 25 ஆம் தேதி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை சாா்பில், உலக மரபுச் சின்னங்கள் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் மகாலில் பாா்வையாளா்கள் நவம்பா் 25 ஆம் தேதி வரை இலவசமாக சுற்றிப்பாா்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மகாலில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள பெரியவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை.

பாா்வையாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். மகாலில் சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஒளி-ஒலி காட்சிக்கு இலவச அனுமதி கிடையாது. அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT