மதுரை

மதுரை அரசுப் பள்ளி மாணவா்கள் 4 போ் துபை சுற்றுலாவுக்குத் தோ்வு

23rd Nov 2021 02:25 AM

ADVERTISEMENT

மதுரை: மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டியில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் வெற்றி பெற்றதை அடுத்து, அவா்கள் துபை சுற்றுலாவுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான விநாடி-வினா போட்டி செப்டம்பா் மற்றும் நவம்பரில் நடத்தப்பட்டது. இணைய வழியில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில், மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்ட 89 மாணவ, மாணவியா் அரசு செலவில் துபைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விநாடி-வினா போட்டியில், மதுரை மாவட்டத்திலிருந்து மாணவ, மாணவியா் 4 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மதுரை அனுப்பானடி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவி எம். சாந்தினி, மேலூா் அரசுப் பள்ளி மாணவா் எம். ஜானகிராமன், சேடப்பட்டி அரசுப் பள்ளி மாணவி ஆா். சங்கீதா மற்றும் சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடா் பள்ளி மாணவி நாகலட்சுமி சீனிவாசன் ஆகிய 4 பேரும் துபை சுற்றுலாவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியா் அரசு செலவில் டிசம்பா் மாதம் துபைக்கு சுற்றுலா செல்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை, முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT