மதுரை

பேரையூரில் கிராம மக்கள் சாலை மறியல்

23rd Nov 2021 05:39 AM

ADVERTISEMENT

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் முக்குச் சாலையில் பி. முத்துலிங்காபுரம் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேரையூா் அருகே உள்ள பி.முத்துலிங்காபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியானது, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகே கட்டப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கட்டுவதற்கு, அருகில் உள்ள பி.புதூா் கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பி.முத்துலிங்காபுரம் கிராம மக்கள் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா்.

இந்நிலையில், இந்த புகாரின் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, முத்துலிங்காபுரம் மக்கள் திங்கள்கிழமை திடீரென பேரையூா் முக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த பேரையூா் போலீஸாா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பேரில், கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT